[embedyt] https://www.youtube.com/watch?v=chdBVtw9ILM[/embedyt]

பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் , நாயகனாக ரிச்சர்ட் ரிஷி, நாயகியாக ஷீலா ராஜ்குமாரும் நடித்துள்ள படம் திரௌபதி .

தமிழ் திரையுலகில் கூட்டுத் தயாரிப்பு (Crowd Funding) முறையில் முதல் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஜூபின் இசையமைக்குகிறார் .

இப்படத்துடைய முதற்பார்வை கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில்., இப்படத்தின் ட்ரைலர் வரும் ஜனவரி 3 ஆம் தேதியன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்., தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

படத்தின் டைட்டிலை வைத்தே இது வன்னியர்களின் வாழ்வியலை கூறும்படம் என்று உறுதியாக சொல்ல முடியும் . தமிழகத்தில் திரௌபதி வழிபாடு வன்னியர்களிடம் தான் அதிகமாக இருக்கிறது.

திரௌபதிக்கு கோயில் கட்டி தெய்வமாக வழிபடும் பழக்கம் அவர்களிடையே உருவானது தான் .

மண்ணும் பெண்ணும் எங்களுக்கு ஒன்னு தான் இதில் யார் கை வைத்தாலும் வெட்டுவோம் என்று இயக்குனர் திரௌபதி டிரைலர் மூலமாக கர்ஜித்துள்ளார் .

டிரைலர் வெளியான சில மணி நேரங்களில் யூடியூப் டிரெண்டிங்கில் 2 ம் இடம் பிடித்துவிட்டது..

சாதி வெறி உறுதிபடுத்தும் விதமாக சாதிகள் உள்ளதடி பாப்பா, அடித்தால் திருப்பி அடி எனவும் குறிப்பிட்டு போஸ்டர் வெளியிட்டுள்ளது படக்குழு..