டெல்லி விமான நிலையம் அருகே மீண்டும் கொரோனா படுக்கை மையம்!

புதுடெல்லி: கடந்தாண்டைப் போலவே, டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் அருகே, கொரோனா படுக்கை மையத்தை திறந்துள்ளது டிஆர்டிஓ.

கடந்தமுறை 1000 படுக்கைகள் அந்த மையத்தில் இருந்தன. தற்போது, 500 படுக்கைகளுடன் அந்த மையம், அதே இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை முதல், அந்த மையம் நோயாளிகளை ஏற்க தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மையத்தின் சிறப்பம்சங்கள்:

* அனைத்து படுக்கைகளிலும் ஆக்ஸிஜன் வசதி உண்டு.

* அதிக எண்ணிக்கையிலான வெண்டிலேட்டர்கள்

* இலவச சேவை

* அடிப்படையான பரிசோதனை வசதிகள்

*  WHO வரையறுத்த வகையிலான ஏசி வசதி

* நரம்பு மற்றும் இதயப் பிரச்சினை உள்ளவர்கள், எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்வதற்கான பரிந்துரையைப் பெறுவார்கள்.