ஜெய்ப்பூர்:.

ந்தியா சோதனை செய்த நாக் ஏவுகளை சோதனை வெற்றிபெற்றதாக இந்திய பாதுகாப்பு ஆராயச்சி கழகம் அறிவித்து உள்ளது.

ராணுவ டாங்கிகள் மூலம்க எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் நாக் என்ற ஏவுகணை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்தது.

ராஜஸ்தான் பாலைவனத்தில் நடைபெற்ற இந்த சோதனை குறிப்பிட்ட இலக்கை முற்றிலுமாக தாக்கி அழித்ததாக பாதுகாப்பு அமைப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று சோதனையில் பயன்படுத்தப்பட்ட நாக் ஏவுகணை மூன்றாவது தலைமுறையை சேர்ந்ததும் என்றும், இந்த ஏவுகணை அதிநவீன தொழில்நட்பத்துடன், இன்ப்ராரெட் கதிர்வீச்சை உணர்ந்து அதற்கேற்ப செயல்படும் வகையில் ரேடாருடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே ஒரு சில நாடுகளிடம் மட்டுமே  இத்தகைய அதிநவீன தொழில்நுட்ப ஏவுகணைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.