அப்துல்கலாம் கனவு நிறைவேறும்:  மோடி நம்பிக்கை!

 

புதுடெல்லி:

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அவரது நினைவாக ராமேஸ்வரம் பேய்க்கரும்பில்  அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதேபோல் டெல்லியிலும் அப்துல்கலாம் நினைவாக,  கலாம் நினைவிடம் மற்றும் அறிவுசார் மையமும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கலாம் நினைவை போற்றும் வகையில், அவரது குறிக்கோளான 2020ல் இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்ற அவரது கனவை நிறைவேற்றும் வகையில் இந்திய பிரதமர் மோடி, மன் கி பாத் நிகழ்ச்சியில்  பேசினார்.

மன் கி பாத் நிகழ்ச்சி தொடர்பான வானொலி உரையில் பேசிய மோடி கூறியதாவது: மறைந்த முன்னாள் பிரதமர் அப்துல்கலாம் கனவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்தியா தொழில்நுட்ப புரட்சி மூலம், வளர்ச்சி பாதைக்கு செல்ல முயன்று வருகிறது.  ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தப்படும் என்றார். இதன் பயனாக அப்துல்கலாம் கண்ட கனவை நிறைவேற்றப்படும் என மோடி பேசினார்.

மேலும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள செல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு வானொலி உரை மூலம் வாழ்த்தும் தெரிவித்தார்.