தாரா, மகாராஷ்டிரா

காராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் பேரணியில் கொட்டும் மழையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கலந்துக் கொண்டுள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.   இந்த தேர்தலையொட்டி காங்கிரஸ் மற்றும் பாஜகவினரும்  அவர்கள் கூட்டணிக் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.  தற்போது பிரசாரம் முடிவடைந்துள்ளது.     மகாராஷ்டிரா மாநிலம் சதாரா தொகுதியில் நேற்று தேசிய வாத காங்கிரஸ் சார்பில் தேர்தல் பேரணி நடந்தது.

இந்தப் பேரணியின் போது கடும் மழை பெய்தது.   ஆயினும் அக்கட்சியின் தலைவர் சரத்பவார்  கலந்துக்கொண்டு உரையாற்றினார்.   சுமார் 79 வயதாகும் சரத்பவாரை பல சமூக ஊடகங்கள் பாராட்டி உள்ளன.  இந்த வயதில் கொட்டும் மழையில் பிரசாரத்தை அவர் தொடர்ந்ததன் மூலம் அவர் நாட்டுக்கு சேவை செய்வதில் பின்வாங்க மாட்டார் என்பதை உலகம் அறிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தனது உரையில் சரத்பவார், “கடந்த தேர்தலில் நாங்கல் சதாரா தொகுதியில் சிவாஜியின் வம்சத்தைச் சேர்ந்த உதயன்ராஜே போன்ஸ்லேவை போட்டியிட வைத்து வெற்றி கண்டோம்.   ஆனால் அவர் அதன் பிறகு பாஜகவுக்குத் தாவி விட்டார்.  எங்கள் தேர்வு தவறானது என நான் உணர்ந்துக் கொண்டேன்.   யாராக இருந்தாலும் தனது தவற்றை ஒப்புக் கொள்ள வேண்டும்.

நான் எனது தவறை அனைவர் முன்னிலையும் ஒப்புக் கொள்கிறேன்.   அந்த தவறை சரி செய்ய இப்போது நான் சரியான வேட்பாளரைப் போட்டியிட வைத்துள்ளேன்.   என்னுடைய தவறை சரி செய்ய வரும் 21 ஆம் தேதி அன்று சரியான வேட்பாளருக்கு வாக்களித்து நீங்கள் உதவ வேண்டும்.    இதை இளைஞர் முதியோர் உள்ளிட்ட அனைவரும் செய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.