ஈரானில் நடைபெற உள்ள செஸ் போட்டியில் பங்கேற்க மாட்டேன்: இந்திய வீராங்கனை சவுமியா அறிவிப்பு

டில்லி:

ரானில் நடைபெற உள்ள சதுரங்க போட்டியில் பங்கேற்க மாட்டேன் என்று  இந்திய வீராங்கனை சவுமியா அறிவித்து உள்ளார்.

ஈரான் நாடு போட்டியில் பங்கேற்கும் பெண்கள்  தலையை துணியால் மூட வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளதால் தான் பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்து உள்ளார்.

ஆசிய சதுரங்க போட்டிகள் ஈரானின் ஹமடான் நகரில் ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 4ந்தேதி முடிவடைகிறது.  இந்த போட்டியில்  இந்திய உள்பட  வெளி நாடுகளில் இருந்து பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் ஈரான் அரசு,  போட்டியில் கலந்து கொள்ளும் பெண்கள் தலையை மறைக்கும் வகையில் துணியால் மூடிக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுன் விதித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய வீராங்கனை  சவுமியா, ஈரானின் இந்த கட்டுப்பாடுகள் தனது தனி மனித உரிமையை மீறும் வகையில் உள்ளதாக கூறி போட்டியை புறக்கணிக்கப்போவதாக அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே கடந்த  2016 ம் ஆண்டு ஈரானில் நடந்த ஆசிய துப்பாக்கிச் சுடும் போட்டியில், ஈரானின் கட்டுப்பாடு காரணமாக, இந்தியா  துப்பாக்கி சுடும் வீராங்கனை ஹீனா சித்து பங்கேற்காமல் தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.