அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிய தடை: ராஜஸ்தான் பாஜ அரசு அதிரடி

ஜெய்ப்பூர்:

மாநில  அரசு ஊழியர்கள் பணியின்போது ஜீன்ஸ், டி-சர்ட் அணிய தடை  ராஜஸ்தான் அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. இது அரசு  ஊழியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தானில்   முதல்வர்  வசுந்தரா ராஜே தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஏற்கனவே கல்லூரி மாணவ மாணவிகளுக்கு டிரெஸ் கோடு எனப்படும் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அரசு ஊழியர்களும் பணியின்போது,  ஜீன்ஸ், டி-சர்ட் போன்ற ஆடைகளை அணிவதற்கு தடை விதித்து ராஜஸ்தான் மாநில தொழிலாளர் நலத்துறை உத்தரவை பிறப்பித்து உள்ளது.

ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தராஜே சிந்தியா

இந்த குறித்து, தொழிலாளர்துறை ஆணையாளர் கிரிராஜ் சிங்  மாநில அரசு துறைகளுக்கும் அனுப்பி உள்ள  சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தொழிலாளர் நலத்துறையில் பணியாற்றும் சில அதிகாரிகள், ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் இதர அநாகரீகமான, கண்ணியக் குறைவான ஆடைகளை அணிந்து அலுவலகத்துக்கு வருகிறார்கள். பணிக்கு வரும் போது இது போன்ற உடைகளை அணிவதை ஊழியர்கள் தவிர்க்க வேண்டும். நாகரீகமான, கண்ணியமான உடைகளை அணிந்து ஊழியர்கள் பணிக்கு வரவேண்டும். “பார்வையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் வேறுபடுவதற்கு சரியான ஆடை குறியீடு அவசியம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில அரசின் இந்த  உத்தரவுக்கு மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.  இது போன்று கட்டுப்பாடு விதிப்பதற்கு அரசு பணியாளர்களுக்கான விதிகளில் இடமில்லை. இந்த நடவடிக்கையை நாங்கள் ஜனநாயக முறையில் எதிர்ப்போம்’’ என்று தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள  காங்கிரஸ் கட்சி  செய்தி தொடர்பாளர , ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை அரசு ஊழியர்கள் மற்றும் ஒவ்வொருவர் மீதும் திணிக்க பா.ஜனதா அரசு முயற்சிக்கிறது என்று குற்றச்சாட்டி உள்ளார்.

ஏற்கனவே  கடந்த ஆண்டு, ராஜஸ்தானில் அரசாங்கத்தின் பாதிக்கும் விதத்தில் சமூக வலைதளங்களில் அரசு ஊழியர்கள் ஏதேனும் எழுதினால் அவர்கள் மீது  க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது அரசு ஊரியர்களின் டிரெஸ் கோடு குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே மாநிலத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் அரசின் டிரெஸ் கோடுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது அரசு ஊழியர்களுக்கு டிரெஸ் கோடு குறித்து கூறியிருப்பது மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.