உடை சர்ச்சை: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆளுனரின் செயலாளர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி திடீர் ரத்து!

திருச்சி:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று ஆளுனரின் செயலாளர் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  கூட்டத்திற்கு பேராசியர்கள் அழகாக உடை அணிந்து வருமாறு பல்கலை.பதிவாளர்  சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.

இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், ஆளுனரின் செயலாளர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்,   ஆளுனரின் செயலாளர் கலந்து கொள்ளும் இந்த கூட்டம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி வியப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இதன் காரணமாக, இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுனரின் செயலாளர் கலந்து கொள்ளும் இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.