டிரிங்க் அண்ட் டிரைவ்: பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கம்?

--

து போதையில் காரோட்டி காவல்துறையிடம் சிக்கி அபராதம் செலுத்திய பா.ஜ.க. பிரமுகரான நடிகை காயத்ரி ரகுராம் கட்சியைவிட்டு நீக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

திரைத்துறையில் டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். பிறகு சில திரைப்படங்களில் நாயகியாக நடித்தார். வாய்ப்புகள் அருகிவிட்ட நிலையில், பிக்பாஸ் சீசன் 1ல் பங்குபெற்றார்.

இதற்கிடையே அவர் பாஜகவில் இணைந்து செயல்பட்டார்.

கடந்த வருடம் விஜய் டி.வி. ஒளிபரப்பிய கமல்ஹாசன் தொகுத்தளித்த பிக்பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்ட போது, சக போட்டியாளரை ‘சேரி பிஹேவியர்’ என்று காயத்ரி ரகுராம் விமர்சித்தது சர்ச்சையை கிளப்பியது. அடிமட்டத்தில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை அவர் இழிவாக குறிப்பிட்டதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அப்போதே அவர் பாஜகவில் இருந்து நீக்கப்படுவார் என்று ஒரு யூகச் செய்தி பரவியது. ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று அவர் சென்னை அடையார் பகுதியில் தனது காரை ஒட்டிக்கொண்டு வந்தார். அப்போது சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர்கள், அவரது காரை நிறுத்தினார்கள். சோதனையில் அவர் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டி வந்தததற்காகவும் ஓட்டுநர் உரிமம் இல்லாததாலும் அவரிடம் அபராதம் செலுத்தும்படி தெரிவிக்கப்பட்டது. பிறகு 3,500 ரூபாய் தொகையை காயத்ரி ரகுராம் அபராதம் செலுத்திவிட்டுச் சென்றார்.

இந்தத் தகவல் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், பா.ஜ.க. என்பது ஒழுக்கத்தை மதிக்கும் கட்சி.  காயத்ரி ரகுராம் மீது தொடர்ந்து புகார்கள் வெளியானபடி இருக்கிறது. ஆகவே அவரை கட்சியைவிட்டு நீக்க வேண்டும் என்று கட்சிக்குள் பலரும் கூறுவதாகவும், இதையடுத்து அவர் கட்சியைவிட்டு நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

#drink #drive #Actress #GayatriRaghuram #dismisses #BJP