’’கொஞ்சமாய் குடி’’  பல் டாக்டர் பரிந்துரை..

கொரோனா ஒழிப்பின் பிரதான அம்சமாக நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில் முழு அடைப்பு காரணமாக மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.

தலைநகர் ஷில்லாங்கில் உள்ள பல் டாக்டரிடம் ,சிகிச்சை பெறுவதற்காக 65 வயது முதியவர் ஒருவர் வந்திருந்தார்.

அந்த நோயாளி குடிக்கு அடிமையானவர்.

குடிக்க வாய்ப்பு இல்லாததால் , அவருக்கு  ’வித்டிராவல் சிம்டம்’ –பாதிப்பு இருந்தது,

அவருக்கு ’’இரண்டு பாட்டில் விஸ்கி’ கொடுக்க பிரிஸ்கிருப்ஷன் எழுதிக் கொடுத்த பல் டாக்டர்,’’ இரண்டு பாட்டிலையும் ஒரே நேரத்தில் குடித்து தொலைக்காதே.. ஒரு நாளைக்கு இரண்டு ‘பெக்’ மட்டுமே  அருந்து’’ என்று ‘அட்வைஸ்; செய்து நோயாளியை வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

’ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று கேட்டால்’’ வித்டிராவல் சிம்டம் உள்ளவர்களுக்கு மதுவைப் பரிந்துரைக்கலாம் எனக் கேரள அரசு கூறியுள்ளது, தெரியாதா?’’ என எதிர்க் கேள்வி கேட்கிறார், அந்த பல் டாக்டர்.

– ஏழுமலை வெங்கடேசன்