குடிமகன்களுக்கு அதிர்ச்சி: விலையை உயர்த்துகிறது டாஸ்மாக்!

சென்னை,

மது பானங்களின் விலையை உயர்த்த டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதன் காரணமாக மதுபானங்களின் விலை குறைந்தது 5 சதவிகிதம் வரை உயரும் என தெரிய வருகிறது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தொடர்பான விவாத கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், டாஸ்மாக் மதுபான விலை உயர்வு குறித்த  சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாவை அமைச்சர் கே.சி. வீரமணி தாக்கல் செய்தார். இதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுகிறது.

மாநிலத்தின் வருவாயைப் பெருக்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதுபோல், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியில் மாற்றம்செய்வதற்கான சட்ட மசோதா வும் சட்டசபையில் தாக்கல்செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.