Random image

3வது நாளாக நீடிக்கும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்: சென்னை மக்கள் அவதி

சென்னை:

னுமதியில்லாமல் செயல்பட்டு வந்த குடிநீர் ஆலைகளை சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தமிழகம் முழுவதும் தனியார் குடிநர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

இன்று 3வது நாளாக அவர்களது வேலைநிறுத்தம் தொடரும் நிலையில், சென்னை உள்படபல இடங்களில் கேன் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் சொல்லொனா துயரத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

தமிழகத்தில் இயங்கி வந்த  உரிமம் பெறாத 132 ஆலைகளை மூட உடனே மூட உத்தரவிட்ட நீதிமன்றம், அதுகுறித்து  மார்ச் 3ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என அரசை கடுமையாக எச்சரித்தது. இதைத்தொடர்ந்து பல இடங்கிளல் உரிமம் பெறாத ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதிகாரிகளின்   நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் குடிநீர் உற்பத்தியாளர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குடிநீர் கேன் விநியோகம் செய்வதில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கேன் குடிநீரையே நம்பி உள்ள பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.