சென்னை:

மிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று காணொளி காட்சி மூலம்  நடத்த இருந்த ஆலோசனை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இந்தஆண்டு வரலாறு காணாத தண்ணீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதையொட்டி இன்று முதல் 3 நாட்கள்  அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், குடிநீர் வழங்கல் துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் மாவட்டங்களில் நிலவும் தண்ணீர் பிரச்சினை மாற்று திட்டங்கள் அவற்றை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள், வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ள மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரப்படுத்துவது நிலத்தடி நீர் செரிவூட்டும் திட்டங்களை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகவும்,  கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் விவகாரங்களின் அடிப்படையில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையொட்டி இன்று  குடிநீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று  காணொளி காட்சி மூலம் நடத்த இருந்த ஆலோசனை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது.  ரத்துக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.