சென்னை:

மிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை தடுப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொள்ளும் கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் தண்ணீர்  குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் பருவ மழை பொய்த்து போனதாலும், தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை அண்டை மாநிலங்கள் வழங்க மறுப்பதாலும், தமிழகத்தில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

மக்களுக்கு தேவையான தண்ணீர் லாரிகள் மூலம் விநியோகிகப்பட்டு வந்தாலும், மக்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் பெரும்பாலான  ஐடி நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி, மற்ற அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.