‘த்ரிஷ்யம் 2’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை கைப்பற்றிய பனோரமா ஸ்டூடியோஸ் இண்டர்நேஷனல்….!

‘த்ரிஷ்யம் 2’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டூடியோஸ் இண்டர்நேஷனல் வாங்கியுள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் ஓடிடி தளத்தில் ‘த்ரிஷ்யம் 2’ வெளியாகி முதல் பாகத்தைப் போலவே விமர்சனங்களிலும், ரசிகர்களாலும் பெரும் பாராட்டைப் பெற்றது.

இந்த வரவேற்பால் ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் ரீமேக் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே வெங்கடேஷ் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இரண்டாம் பாகத்தின் தெலுங்கு ரீமேக்கும், ரவிச்சந்திரன் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கன்னட ரீமேக்கும் தயாராகி வருகிறது.

தற்போது படத்தின் இந்தி ரீமேக்கும் உறுதியாகியுள்ளது. ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டூடியோஸ் இண்டர்நேஷனல் வாங்கியுள்ளது.