மலையாளத்தில் மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘த்ரிஷ்யம்’. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது.

இதையடுத்து மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில்‘த்ரிஷ்யம் 2’ உருவானது.

த்ரிஷ்யம் 2 படத்தின் ரீமேக் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டன. அதில் முதலாவதாக தெலுங்கு ரீமேக் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது த்ரிஷ்யம் 2 கன்னட ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.வாசு இயக்கும் இந்தப் படத்துக்கு த்ரிஷ்யா 2 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன், நவ்யா நாயர், பிரபு, ஆஷா சரத் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். ஈ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

https://twitter.com/E4Emovies/status/1381824424635142144