மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பில் மாற்றம்…..!

2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. மலையாளத்தில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் ‘த்ரிஷ்யம்’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்குப் பிறகு மோகன்லால் – ஜீத்து ஜோசப் இணைப்பில் ‘ராம்’ திரைப்படம் உருவாகி வருகிறது.

‘ராம்’ படத்துக்கு முன்னதாகவே, மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணி இணைந்து ‘த்ரிஷ்யம் 2’ படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

மோகன்லால் பிறந்த நாளான மே 21-ம் தேதி இந்தப் படம் தொடக்கத்தை வீடியோவாக அறிவித்தார்கள்.ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல், கடும் மழை ஆகியவற்றால் ‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பை ஒத்தி வைத்துவிட்டார்கள். செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் எனத் தெரிகிறது.