“கதைகளை இரவல் வாங்கும் அவசியம் எனக்கு இல்லை” திரிஷ்யம் இயக்குநர் ஆவேசம்…

 

மோகன்லால்- மீனா நடித்த ‘திரிஷ்யம்’ பெரும் வெற்றி பெற்றதால், அதன் இரண்டாம் பாகத்தையும் உருவாக்கினார் – டைரக்டர் ஜீத்து ஜோசப்.

இரண்டாவது பாகமும் வெற்றி அடைந்தது.

ஜீத்து ஜோசப், தனது படத்தில் நடிக்க விரும்புவோர், தன்னை தொடர்பு கொள்ள வசதியாக “ஈ.மெயில் ஐடி”யை நெருக்கமானவர்களுக்கு கொடுத்துள்ளார்.

நடிக்க விரும்புவோர் மட்டும் அவரை மெயில் மூலம் தொடர்பு கொண்டனர்.

இந்த நிலையில் வானொலியில் பேட்டி அளித்த ஜீத்து ஜோசப், நடிக்க விரும்புவோர் தன்னை தொடர்பு கொள்வதற்காக, தனது மெயில் ஐ.டி.யை தெரிவித்து இருந்தார்.

யாரோ விஷமி “திரிஷ்யம்- 3 பாகத்தை ஜீத்து விரைவில் உருவாக்க போகிறார்..அவருக்கு கதை வேண்டுமாம்” என கொளுத்திப்போட – ஜீத்து ஜோசப்புக்கு மெயிலில் ஏகப்பட்ட கதைகள் வந்து குவிந்துள்ளன.

இதனால் அலறி விட்டார், ஜோசப் “நான், திரிஷ்யம்-3 ஆம் பாகத்தை உருவாக்குவது குறித்து யோசிக்கவே இல்லை. எனது மெயில் காலியாகி விடும் போல் உள்ளது. எனக்கு யாரும் கதைகள் அனுப்ப வேண்டாம்” என கெஞ்சாத குறையாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“யாரிடமும் கதை இரவல் வாங்கும் நிலையில் நான் இல்லை” எனறும் ஜீத்து ஜோசப் எரிச்சலுடன் குறிப்பிட்டுள்ளார்.

– பா. பாரதி