‘த்ரிஷ்யம் 2’ ஒரு குடும்ப படமாக இருக்கும் : ஜீத்து ஜோசப்

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, ஜார்ஜ் குட்டி ஒரு புதிய காவல் நிலைய கட்டிடத்திலிருந்து வெளியேறுவது நம் கண்களில் அப்படியே நிற்கிறது .அனைவரும் தேடும் ஒரு வாலிபனின் உடலை அந்த கட்டடத்தில் புதைத்திருப்பார் ஜார்ஜ் குட்டி.

ஆம் ஜார்ஜ் குட்டியின் கதையை எழுதி, த்ரிஷ்யம் என்ற மிகப் பிரபலமான திரைப்படத்தை உருவாக்கிய ஜீத்து ஜோசப், இப்போது அதன் தொடர்ச்சியை எழுதியுள்ளார். மறக்க முடியாத ஜார்ஜ் குட்டியாக நடித்த மோகன்லால், த்ரிஷ்யத்தின் 2 ஆம் பாகத்தில் நடிப்பார் .

இந்த படம் மிக பெரிய வரவேற்பை பெற்றது . தமிழில் கமல் ஹாசனும் ஹிந்தியில் அஜய் தேவ்கனும் நடித்துள்ளனர் .

டி.என்.எம்-க்கு அளித்த பேட்டியில் ஜீத்து ஜோசப் சில நாட்களாக இதன் தொடர்ச்சியை எழுத முயற்சி செய்தேன் . இந்த கொரோனா ஊரடங்கு எனக்கு வழி வகுத்தது என்று கூறியுள்ளார் .

“த்ரிஷ்யத்திற்குப் பிறகு, அதன் தொடர்ச்சியைப் பற்றி எப்போதும் கேள்விகள் உள்ளன. லாலெட்டன் (மோகன்லால்) என்னையும் கேட்பார். அந்தக் கதையை எப்படித் தொடர வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. இறுதியாக ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தின் கதை மீண்டும் எழுதப்பட்டது, ”என்று ஜீத்து கூறினார்.

மேலும் ஒரு குடும்ப படமாக தான் அது எடுக்கப்பட்டது ஆனால் எப்படியோ அது ஒரு த்ரில்லர் என்று முத்திரை குத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியிலும், அதே அணுகுமுறையையும் சேர்த்துள்ளேன் என கூறியுள்ளார் .

மீனா ஜார்ஜ் குட்டியின் மனைவி அன்சிபா மற்றும் எஸ்தர் மகள்களாக நடிக்கிறார்கள். ஸ்கிரிப்டைப் பற்றி என்னால் அதிகம் வெளிப்படுத்த முடியாது.என கூறினார் .

ஸ்கிரிப்டை நண்பர்கள், மோகன்லால் மற்றும் த்ரிஷ்யத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பவூர்க்கு அனுப்பினேன் அவர்களுக்கும் அது பிடித்திருந்தது .

கொரோனா ஊரடங்கால் ராம் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது .

“இது சிறிய படங்களுக்கான நேரம். திரைப்பட படப்பிடிப்பை அரசாங்கம் அனுமதித்தவுடன், நாங்கள் அதைத் திட்டமிடத் தொடங்குவோம், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்து கவனித்துக்கொள்வோம், “என்று அவர் கூறினார்.