போஸ்கோ வழக்கில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பை நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது.

மும்பையில் வாகன ஓட்டுநராக இருக்கும் இளைஞர் ஒருவருக்கும், அவரது உறவுக்கார கல்லூரி மாணவிக்கும் மோதல் இருந்து வந்துள்ளது.

ஒருநாள் கல்லூரி சென்ற போது மாணவியிடம், அந்த டிரைவர் சண்டை போட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றியதால், தனது ‘அந்தரங்கத்தையும்’ மாணவியிடம் காட்டியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

மும்பை போஸ்கோ நீதிமன்ற நீதிபதி ஷிண்டே வழக்கை விசாரித்து, அந்த டிரைவருக்கு ஓராண்டு ஜெயில், தண்டனை விதித்தார்.

“குற்றம் சாட்டப்பட்ட டிரைவர், புகார் கொடுத்த மாணவி மீது பலப்பிரயோகம் செய்யவில்லை. எனினும் அவர் செய்த காரியம் ஆபாச நோக்கம் கொண்டது. இந்த சம்பவத்தை மாணவியால் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது” என நீதிபதி ஷிண்டே தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

– பா. பாரதி