சென்னை

ஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஓட்டுனர் தேவையில்லாத டிராக்டர்களை வரும் 2018 ஆண்டு முதல் விற்பனை செய்ய உள்ளது.

சென்னையை சேர்ந்த டிராக்டர் உற்பத்தி நிறுவனம் மஹிந்திரா & மஹிந்திரா.  இந்த நிறுவனம் டிராக்டர் உற்பத்தியிலும், விற்பனையிலும் முதல் இடங்களில் உள்ள நிறுவனங்களில் ஒன்றாகும்.  தற்போது இந்த நிறுவனம் டிரைவர்லெஸ் டிராக்டர் எனப்படும் ஓட்டுனர் தேவைப்படாத தானியங்கி டிராக்டரை தங்கள் நிறுவன விற்பனை அரங்கில் பார்வைக்கு வைத்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கா, “எங்களுடைய எந்தக் கண்டுபிடிப்பு விவசாய உற்பத்தி பெருக்கத்துக்கு மிகவும் உதவும்.  இந்த டிராக்டர் அடுத்த ஆண்டான 2018 முதல் விற்பனைக்கு வரும்.  இதன் மூலம் இந்திய விவசாயிகள் மேலும் பயனடைவார்கள்.

இந்திய நாட்டுக்கு ஏற்ற வகையில் இந்த டிராக்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.  மேலும் இந்த டிராக்டர்களை அகில உலக அளவில் கொண்டு செல்ல ஆய்வுகள் நடந்துக் கொண்டு இருக்கிறது.   இந்த டிராக்டரில் அனைத்தும் தானியங்கி முறையில் நடக்கும் படி தொழில்நுட்பம் அமைக்கப் பட்டுள்ளது.

உழவு நடத்தும் போது வாகனத்தை திருப்புவதும் தானியங்கி முறையில் நடந்து விடுவதால் அடுத்தடுத்த வரிசையில் உழுவது அதுவே நடந்து விடும்.  விவசாயியின் வேலை இதனால் கணிசமாக குறையும்.   அதே போல எஞ்ஜினை ஆன் ஆஃப் ஆகியவற்றை ரிமோட் மூலம் செய்ய முடியும்” என கூறினார்.