டில்லி:

ட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக  மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி உள்ளார்.

ஏற்கனவே, மத்திய அரசின் பல நலத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. செல்போன் எண்ணுடன் ஆதார் இணைப்பு மற்றும் பான் எண்ணுடன் ஆதார் இணைப்புப் பணிகளும் நடந்த வருகின்றன. அனைத்து வகையான வங்கி பரிவர்த்தனை போன்ற அனைத்து வகையான பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஓட்டுநர் உரிமத்தையும் ஆதார் எண்ணுடன்  இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

ஏற்கனவே, கடந்த ஆண்டு செப்டம்பரில் அரியானா மாநிலத்தில் நடைபெற்ற டிஜிட்டல் மாநாடு 2017-ல்  கலந்து கொண்டு பேசிய ரவி ஷங்கர் பிரசாத், ஆதார் என்பது டிஜிட்டல் அடையாள அட்டையே தவிர, ஃபிசிகல் அடையாள அட்டையல்ல என்றும்,  ஓட்டுநர் உரிமத்தோடு ஆதார் எண் இணைப்பு குறித்த அறிவிப்பையும் விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து, இதுகுறித்து உச்சநீதி மன்ற வழக்கின் விசாரணையின்போது,  சமீப காலங்களில் சாலை விபத்துகள் மிகவும் அதிகரித்து வருகின்றன.   இதற்கு முக்கிய காரணம் திறமையற்ற ஓட்டுனர்களே எனக் கூறப்படுகிறது.   மேலும் இந்த விபத்துக்கு காரணமான பல ஓட்டுனர்களிடம் உள்ள ஓட்டுனர் உரிமங்கள் போலியானவை எனவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக விரைவில் ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் இணைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், இதன் காரணமாக  போலி ஓட்டுநர் உரிமங்கள் கட்டுபடுத்தப்படும் என்றும், ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் அது செல்லாததாகி விடும் என்றும் கூறினார்.