அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரி ஓட்டுனர் உரிமம் : மத்திய போக்குவரத்து துறை

டில்லி

னைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிர்யான ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என மத்திய போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது ஓவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு விதமான ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இத்தகைய உரிமங்கள் 32000 வழங்கப்படுகின்றன. அத்துடன் ஒவ்வொரு நாளும் 43000 வாகனங்கள் பதிவு செய்யவும் புதிப்பதும் நடக்கிறது. தற்போது மத்திய போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், “ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போது ஒவ்வொரு விதமான ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. இந்த நடைமுறைகளை ஒருமுகப்படுத்த வரும் 2019 ஆம் ஆண்டு ஜூலை முதல் ஒரே மாதிரியான உரிமம் வழங்கப்பட உள்ளது.

இந்த உரிமங்கள் ஏடிஎம் கார்டைப் போல் வடிவமைக்கப்பட்டிருகும். இந்த உரிமத்தில் உள்ள சிப் பில் கியூ ஆர் கோடு வழங்கப்படும் அதன் மூலம் உரிமம் பெறுபவரின் அனைத்து விவரங்களும் அறிந்துக் கொள்ள முடியும். “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed