மானிய ஸ்கூட்டர்: வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இன்று இயங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை,

மிழகம் முழுவதும் விடுமுறை தினமான இன்று அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் இயங்கும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24ந்தேதி நடைபெற உள்ள விழாவில்,  பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கு மனு செய்வதற்கான கடைசி நாள் நாளை மறுதினத்துடன்  முடிவடைகிறது.

இதன் காரணமாக, மானிய விலையில் ஸ்கூட்டர் பெற விரும்பும் பெண்கள், அதில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் படி, ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் பெற பெண்கள் படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக வட்டார போக்குவரத்து கழகம் பெண்கள் கூட்டத்தில் திணறி வருகிறது.

இதையடுத்து விடுமுறை தினமான இன்றும் வட்டார போக்குவரத்து அலுவலங்கள் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று,  வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழக்கமான பணிகளை மேற்கொள்ளாமல், ஓட்டுனர் பயிற்சி உரிமம் வழங்கும் பணிகள் மட்டுமே நடைபெறும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.