பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆளில்லா விமானங்கள்! டிரம்ப்

வாஷிங்டன்,

யங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ஆளில்லா விமானங்களை பயன்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதியை டிரம்ப் வழங்கி உள்ளார்.

டிரம்ப் அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். தற்போது அமெரிக்காவின் பாதுகாப்பு துறையை மறுகட்டமைப்பு செய்து வருகிறார்.

இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல்களில் சந்தேகப்படும்படியான பயங்கரவாதிகள் மீது ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தாக்கி அழிக்க அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ-வுக்கு டிரம்ப் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே, கடந்த 2001-ம் ஆண்டில் அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டை கோபுர தகர்ப்பு தாக்குதலில் தொடர்புடைய அல்கொய்தா பயங்கரவாதிகளை ஆளில்லா விமானங்களை பயன்படுத்திளே அமெரிக்கா வேட்டையாடியது. தொடர்ந்து இதை பயன்படுத்தியே ஐஎஸ் பயங்கரவாதிகளை வேட்டையாட முடிவு செய்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Drones against terrorists! Trump, பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆளில்லா விமானங்கள்! டிரம்ப்
-=-