போதை மருந்து விவகாரம் : 3 நடிகைகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை..

போதை மருந்து விவகாரம் : 3 நடிகைகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை..
இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கை   சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையில், இந்தி சினிமா நட்சத்திரங்கள், போதைப் பொருள் பயன்படுத்துவது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே நடிகை ரியா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில், இந்தி நடிகைகள் தீபிகா படுகோனே,ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோர் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
ஷ்ரத்தா கபூரும், சாராவும் , தாங்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது கிடையாது என அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதன் பின் தீபிகா படுகோனேவிடம், போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர் கே.பி.எஸ். மல்ஹோத்ரா தலைமையிலான 5 அதிகாரிகள் துருவி துருவி  விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது, பெண் அலுவலர்களும் உடன் இருந்தனர்.
தீபிகாவின்  செல்போனை அதிகாரிகள்  வாங்கி வைத்துக்கொண்டு, அதன்பின் விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
2017 ஆம் ஆண்டு போதைப்பொருள் பயன்பாடு குறித்து தனது மேலாளருடன், போனில் உரையாடியதை தீபிகா ஒப்புக்கொண்டார்.
போதைப்பொருளை தீபிகா உட்கொண்டுள்ளாரா? என்பது பற்றி அவர் இந்த விசாரணையில் ஏதும் தகவல் தெரிவித்தாரா எனத் தெரியவில்லை.
– பா.பாரதி