விருதுநகர்: பெற்ற குழந்தைகளின் கழுத்தை அறுத்துக்கொன்ற போதை ஆசாமி தலைமறைவு

விருதுநகர்:

குடி காரணமாக தனது மகன் மகள் ஆகியோரை கொலை செய்தும், மனைவியை கொலை செய்ய முயற்சித்தபோது, அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில்,  அங்கிருந்து தப்பி தலைமறைவான கணவனை போலீசார்  தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள சல்வார்ப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி அந்தோணி சாமி. இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். குடிப்பழகத்திற்கு அடிமையான அந்தோணி, அடிக்கடி தனது குடும்பத்தினருடன் தகராறு செய்வாராம்.

இந்நிலையில், சம்பவத்தன்று குடிபோதை யில் வந்த அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு மூண்டது.

இதனால் ஆத்திரமடைந்த அந்தோணி, தனது குழந்தைகள் இரண்டையும் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, மனைவியையும் கொல்ல முயற்சித்தார். ஆனால், அவர்  லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், அந்தோணி வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்த விருதுநகர் போலீசார், விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட இரு குழந்தைகளையும் பிரேத பரிசோதனைக்கும், மனைவியை சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்து கொடூர கொலை குறித்து, தலைமறைவாக உள்ள  அந்தோணி சாமியை போலீசார் தேடி வருகின்றனர்.