போதை மருந்து விவகாரம்: மோடி வேடத்தில் நடித்த நடிகர் விவேக் ஓபராயின் மும்பை வீட்டில் சோதனை

பெங்களூரு: போதை மருந்து விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி வேடத்தில் படத்தில் நடித்த பாலிவுட்நடிகர் விவேக் ஓபராயின் மும்பை  வீட்டில் பெங்களூரு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்

கர்நாடக மாநிலத்தில், போதைப்பொருட்கள் விற்பனை பரவலாக நடப்பதாக எழுந்த புகாரில் சின்னத்திரை நடிகை உள்பட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் கன்னட திரை உலக பிரபலங்கள் பலரும் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கன்னட நடிகை ராகிணி திவேதியிடம் வீட்டில் விசாரணை நடத்தியதுடன், அவரையும்  கைது செய்தனர். இதன் காரணமாக விவேக் ஓபராயியின் மைத்துனர் ஆதித்யா தலைமறைவாகிவிட்டார்.

இதைத்தொடர்ந்து,   போதை மருந்து கும்பல் குறித்து விசாரித்து வரும் மத்தியக் குற்றப் பிரிவு காவல்துறையினர்,  கடந்த செப்டம்பர் மாதம், நடிகர் விவேக் ஓபராயின் மைத்துனர் ஆதியா அல்வாவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர். ஆதித்யா அல்வா மறைந்த முன்னாள் அமைச்சர் ஜீவ்ராஜ் அல்வாவின் மகன். ஜீவ்ராஜ் மிகச் செல்வாக்கான, அதிகாரமிக்க அமைச்சர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

இந்த நிலையில் விவேக் ஓபராய்க்கு சொந்தமான மும்பையில் உள்ள பங்களா விட்டில் பெங்களூரு வீட்டில் இன்று போதை மருந்து கும்பல் சோதனை நடத்தி உள்ளனர்.