போதை மருந்து வழக்கு : கன்னட நடிகைகளுக்கு ஜாமீன் மறுப்பு

பெங்களூரு

போதை மருந்து வாக்கில் தொடர்புள்ள இரு கன்னட நடிகைகளுக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு எழுந்த நடிகர் நடிகைகள் போதை மருந்து பழக்கம் குறித்த வழக்கு நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது.

கன்னட திரை உலகினர் விருந்து நிகழ்ச்சிகளில் போதை மருந்துகள் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அத்துடன் போதை மருந்து விற்பனை கும்பலுடன் இவர்களில் சிலருக்கு தொடர்பு இருந்தது எனவும் கூறப்படுகிறது.

இதையொட்டி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை இணை ஆணையர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.

இதில் கன்னட நடிகைகள் சஞ்ச்னா கல்ரானி, ராகினி உள்ளிடோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று இவர்கள் அளித்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.