வாஷிங்டன்:

சொந்த காசுல சூன்யம் வைத்துக் கொண்டாரே என்று நாம் பேசுவது உண்டு. ஆனால், இப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் உண்மையிலேயே நடந்துள்ளது. அதன் விபரம்:

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் டேவிட் பிளாக்மான். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒகலூசா கவுன்டி ஷெரீப் அலுவலகத்திற்கு 911 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டார்.

அதில் பேசிய அவர் ‘‘ நான் ஒரு மருந்து வியாபாரி. என் காரில் இருந்த 50 டாலர் மதிப்புள்ள போதை பொருளான ஒரு அவுன்ஸ் கொகெயின் இருந்த பையை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். ’’ என்று புகார் செய்தார்.

கொகெயின் தடை செய்யப்பட்ட போதை பொருள். அதை வைத்திருந்ததை அவரே ஒப்புக்கொள்கிறாரே? என்று அதிர்ச்சியில் போலீசார் அவர் கூறிய இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது கொகெயின் அங்கேயே இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

‘‘என் கண்களின் அது தெரியவில்லை’’ என்று பிளாக்மோன் அப்பாவியாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போதை பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக அவரை போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் 4 ஆயிரம் டாலர் பிணையத் தொகையுடன் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த காமெடியான விஷயத்தை போலீசார் சமூக வளைதளங்களில் பகிர்ந்தனர். இது பெரும் வைரலாகி வருகிறது.