கோவை, நவ. 14–

ண்டவாளத்தில் அமர்ந்து தண்ணியடித்த கல்லூரி மாணவர்கள், போதையின் உச்சக்கட்டம் காரணமாக, தண்டவாளத்திலேயே மயங்கி விழுந்த நிலையில், அந்த வழியே வந்த ரெயில் மோதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை இருகூர் – சூலூர் இடையேயான ராவுத்தர்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில், அவர்கள் தண்டவாளத்திலேயே மயங்கிய நிலையில்,  கேரளாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற அதிவேக ரயில் கல்லூரி மாணவர் மீது மோதியது.

இதில் விஸ்வனேஷ்வரன் மட்டும் ரெயில் வருவதை பார்க்கவும் தப்பி உள்ளார். அப்போதும் அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து போத்தனூர் ரெயில்வே போலீசார், 4 பேரின் சடலங்களை மீட்டனர். விஸ்வனேஷை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அவர் தற்போது  படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த மாணவர்கள் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த முகமது சித்திக், ராஜா, கருப்புசாமி, ராஜசேகர், கவுதம் என தெரியவந்தது. கருப்புசாமி, கவுதம் ஆகிய இருவர் அரியர்ஸ் தேர்வு எழுத வந்த பொறியியல் மாணவர்கள். மற்ற மூவரும் சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இறுதியாண்டு படித்து வந்ததாக கூறப்படுகிறது.