நடிகை ரகுல் ப்ரீத் ஐகோர்ட்டில் மனு.. போதை மருந்து விவகாரத்தால் சிக்கல்..

ந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு பல்வேறு திசை களில் சென்றுக்கொண்டிருக்கிறது. அவருக்கு போதை மருந்து கொடுத் தாகவும்,போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் நடிகை ரியாவை போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் பல தகவல்களை அவர் வெளியிட்டு வருகிறார்.


தமிழில் என் ஜி கே, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்கள் மற்றும் இந்தி தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட 25 பேர்களின் பெயர்களை ரியா அதிகாரிகளிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளி யாகி இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் பாலிவுட்டில் போதை பொருள் உட்கொள்ளுதல் மற்றும் போதை மருந்து விற்பவர்களிடம் தொடர்பில் இருப்பதாக என ரியா தெரிவித்திருக் கிறார்.
நடிகை ரகுல் ப்ரீத் பிரபல நடிகை என்பதால் அவரை பற்றி மீடியாக்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதைக்கண்டு அச்சம் அடைந்த நடிகை இன்று தனது வழக்கறிஞர் மூலம் டெல்லி ஐகோர்ட் டில் மனு தாக்கல் செய்திருக்கிறார். சட்ட அமைப்புக்கு வெளியே ஊடகங் கள் தாங்களாகவே விசாரணையை நடத்துகின்றனர். இது சட்டவிதிகளுக்கு முரணானது. தன்னிசையான இந்த போக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என ரகுல் ப்ரீத் கோரி இருக்கிறார்.
ரகுல் பரீத் தற்போது தமிழில் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக் கிறார்.