சு மாட்டில் இருந்து எய்ட்ஸ் (ஹெச்.ஐ.வி.) நோய்க்கு மருந்து தயாரிக்க முடியும் என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து  விஞ்ஞான இதழான நேச்சர் (Nature) – ல் கட்டுரை வெளியாகியுளளது.  அதில், பசுவினைக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் அமெரிக்க விஞ்ஞானிகள் தங்களது புதிய கண்டுபிடிப்பினை பற்றி தெரிவித்துள்ளனர்.

“டேவின் சோக்” தலைமையிலான விஞ்ஞானிகள்  , நான்கு பசு கன்றுகளுக்கு ஹெச்.ஐ.வி வைரஸை செலுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டனர். அப்போது ஆச்சரியம் நடந்தது.

 

 

 

அதாவது, ஹெச்.ஐ.வி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான சிறிது நேரத்திலேயே அதனை எதிர்கொள்வதற்கான சக்திவாய்ந்த ஆண்டி-பயோடிக்கள் பசுக்களின்  உடலின் உருவானது.

பசுக்களிடம் எய்ட்ஸ் நோயை எதிர்க்கும் சக்தி இருப்பதை அறிந்த விஞ்ஞானிகள் ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர்.

ஹெச்.ஐ.வி வைரஸ்களுக்கு எதிராக பசுவின் உடலின் உருவான ஆண்டி-பயோடிக்களை பிரித்தெடுத்தனர். தற்போது இதை மனிதனுக்கு பயன்படுத்துவது தொடர்பாக திட்டமிட்டு வருகிறார்கள்.

தவிர, ஹெச்.ஐ.வி. வைரஸ்  உடலில் புகுந்தவுடன் பசுக்களிடம் எதிர்ப்பு ஆன்டிபயாடிக் தோன்றுவது போல மனித உடலில் ஏன் தோன்றுவதில்லை என்பது குறித்தும் தீவிர ஆய்வு  மேற்கொண்டுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள, தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் (National Institute of Allergy and Infectious Diseases) நிறுவனத்தின் தடுப்பூசித்துறை இயக்குந ஜான் மாஸ்கோலா இது பற்றி தெரிவித்ததாவது:

“எய்ட்ஸ் நோயிலிருந்து நிவாரணம் பெற தற்போது  தற்போது  நடைபெற்றுள்ள ஆய்வுகள் போதுமானவையி இல்லைதான்.  மேலும், ஹெச்.ஐ.வி வைரஸ் எவ்வாறு  மனித நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இருந்து தப்பிக்கிறது என்பது குறித்தும் எவ்வித முடிவுகளும் இந்த சோதனையில் தீர்வு கிடைக்கவில்லை.

ஆனாலும் பசு சோதனை மூலம்,  எய்ஸ்ட்க்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான வெற்றியை அடைந்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.