திருவனந்தபுரம்:

லையாள இளம் நடிகரான ஷேன் நிகாமை மலையாள தயாரிப்பாளர்கள் சங்கம் அவர் ஒப்பந்தமாகி உள்ள 3 படங்களில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இது மல்லுவுட்  பட உலகில் பரபரப்பையும், சர்ச்சையையும்  ஏற்படுத்தி உள்ளது.

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம்நடிகர் ஷேன் நிகாம். இவர் கம்மட்டிபாடம், கும்பளாங்கி நைட்ஸ், பறவா போன்ற டங்களில் நடித்து பிரபலமானவர்  இவர் ஜோபி ஜார்ஜ் தயாரித்த ‘வெயில்’ எனும் படத்தில் நடித்து வந்திருக்கிறார். இதில் நடிக்க ரூ. 30 லட்சம் கேட்ட ஷேன், படப்பிடிப்பு தொடங்கியதும் ரூ. 40 லட்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜுக்கும் ஷேனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட தாக தெரிகிறது. இந்த வாக்குவாதம் காரணமாக ‘வெயில்’ படப்பிடிப்பு முடியும் முன்பே தனது ஹேர் ஸ்டைலை மாற்றி ‘குர்பானி’ எனும் படத்தில் ஷேன் நடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஜோபி ஜார்ஜ்-க்கு ஷேன் நிகாம் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதே வேளையில், ஷேன் நிகாம் போதைக்கு அடிமையாளர்வர் என்றும், இதனால் படப்பிடிப்பு களில் தகராறில் ஈடுபட்டு வருவதாகவும் தயாரிப்பாளர்கள் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.

இதற்கு எதிர்ப்பு ஷேன், மலையாள நடிகர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இது உங்கள் சொந்த பிரச்னை என சங்கம் பதில் அளித்து விட்டதாக கூறப்படுகிறது. அதுபோல தயாரிப்பாளர் சங்கம் அவரை மீண்டும் ஜோபி ஜார்ஜ் படத்தை முடித்து கொடுக்கும்படி உத்தரவிட்டது.

ஆனால்,  ஷேன் நிகாம் குறிப்பிட்டபடி படப்பிடிப்பு வராததால்,   மலையாள திரைப்பட தயாரிப் பாளர் சங்கம், நடிகர் ஷேன் நிகாம் திரைப்படங்களில் நடிப்பதற்கு திடீர் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள  தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், தற்போது திரைப்படத் துறையில் இளம் நடிகர்கள் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளதாகவும், இதுகுறித்து படப்பிடிப்பு தளங்களில் வந்து சோதனையிட கலால் துறையை வரவேற்பதாகவும் தெரிவித்தனர்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஷேன் நிகாமும், அவரது தாயாரான சுனிலாவும் தயாரிப்பாளர்களின் குற்றச்சாட்டை  மறுத்துள்ளனர்.

தயாரிப்பாளர்களுக்கு எதிராக பேசியதாலும், தலைமுடி அமைப்பை மாற்றிதாலும் அவர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக திரையுலக பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த திடீர் தடை கூறிய ஷேன், “நான் ஏன் எதிர்ப்பு தெரிவித்தேன் என்பது பற்றி  தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் பேசினேன் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஷேன் நிகாமின் தலைமுடிதான் பிரச்சினை என்று ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் ஷேன் நிகாம் போன்ற இளம் நடிகர்கள் போதைக்கு அடிமையாக உள்ளனர், இதனால் தான் படஉலகில் பிரச்சினை ஏற்படுவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

ஷேன் நிகாம் ‘தலைமுடி’விவகாரமும், அதனைத் தொடர்ந்து அவர் மீது போதை குற்றச்சாட்டு கூறி விதிக்கப்பட்டுள்ள தடையும் மலையாள திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.