சென்னை
சென்னையில் நள்ளிரவில் குடிபோதையில் அதிவேகமாக ஒட்டிச் சென்ற சொகுசு கார் மோதிய விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ நசுங்கியது. அதில் இருந்த  ஓட்டுநர்கள்  12 பேர் காயமடைந்தனர்.
பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னையின் வார விடுமுறை நாட்களில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்துவது அதிகரித்து வருகிறது. நேற்று நள்ளிரவில் குடிபோதையில் அதிகேவகமாக சொகுசு கார் மயிலாப்பூர்  ராதாகிருஷ்ணன் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்களில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்து குறித்து ராயப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை எற்படுத்திய இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இன்று அதிகாலையில் சென்னை ராதா கிருஷ்ணன் சாலையில் நடுவில் இருந்த தடுப்பில் மோதிய சொகுசு கார் ஒன்று நிலை தடுமாறி அருகில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இந்த விபத்தில் ஆட்டோவினுள்  தூங்கிக்கொண்டிருந்த 11 பேர் காயம் அடைந்தனர். இருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தி.நகரைச் சேர்ந்த விகாஸ், இவர் உச்சநீதி மன்ற வழக்கறிஞர் விஜய் ஆனந்த் என்பவரின் மகனாவார். இவருடன் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரின் தம்பி ஒருவரும், தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் வென்ற டுட்டி பேட்ரியாட் அணியினர் கொடுத்த பார்ட்டியை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதில் விகாஸ்தான் காரை ஓட்டி வந்திருக்கிறார், இருவரும் குடி போதையில் இருந்ததாகவும் தெரிகிறது.
காரில் இருந்த இருவரும் காற்றுப்பைகளின் பாதுகாப்பினால் காயமின்றி தப்பிவிட்டார்கள். ஆனால் ஆட்டோக்களில் தூங்கிக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்களான ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.  வரதன்  கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலத்த காயமடைந்தவர்கள் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். சிறு காயத்துடன் தப்பிய மற்ற 9 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர்.
 
 

இது தொடர்பாக அடையாறு போக்குவரத்து காவல் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே  கடந்த ஜூலை மாதம் குடித்து விட்டு ஆடி காரை ஓட்டி வந்த ஐஸ்வர்யா, தொழிலாளி மீது மோதிய விபத்தில் அந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதே போல கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடிகர் அருண்விஜய் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு திரும்பிய போது குடிபோதையில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனம் மீது மோதினார், பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஜாமினிலும் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மும்பையில் நடிகர் சல்மான் கான் 2002ஆம் ஆண்டில் குடிபோதையில் காரை ஓட்டிசென்று விபத்து ஏற்படுத்தியதில் ஒருவர் பலியானார், பின்னர் அந்த வழக்கில் இருந்து அவர் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீக் என்ட் பார்ட்டிகளில் குடித்து கும்மாளம் போடும் வசதிபடைத்தவர்கள் அதே போதையுடன் காரை ஓட்டி வருவதால் அப்பாவி பொதுமக்கள் சாலைகளில் நடமாடவே அச்சமடைந்துள்ளனர்.