போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் மனோஜ் மீது வழக்கு
சென்னை:
திரைப்பட இயக்குனரான பாரதிராஜாவின் மகன் மனோஜ். இவர் தாஜ்மகால் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மனோஜ் இன்று குடி போதையில் கார் ஓட்டி வந்துள்ளார். இதை நுங்கம்பாக்கம் போக்குவரத்து போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து மனோஜ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.