Random image

போதையின் உச்சம்: உயிருடன் பாம்பை விழுங்கிய கூலித்தொழிலாளி (வீடியோ)

லக்னோ:

து போதையின் உச்சத்தால் கூலித்தொழி ஒருவர் சிறிய பாம்பை உயிருடன்  விழுங்கினார். இதனால் அவர் மரணத்தை தழுவினார். அவர் பாம்பை கையில் வைத்துக்கொண்டு விளையாடிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

உ.பி. மாநிலம் அம்ரோ மாவட்டத்தைச் சேர்ந்த மஹிபால் சிங் என்ற தொழிலாளி. சம்பவத் தன்று அதிக மோது போதை காரணமாக சாலையில் சென்ற சிறய பாம்பை கையில் எடுத்து  விளையாடினார். இதைக்கண்ட அந்த பகுதியை சேர்ந்த சிலர் கிண்டல் செய்ததால், வீராப்பு காரணமாக பாம்பை வாயிற்குள் விட்டு விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது பாம்பு திடீரென வயிற்றுக்குள்  சென்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மஹிபால், பாம்பை வெளியே எடுக்க முயன்றார். முடியவில்லை. இதன் காரணமாக மஹிபாலுக்கு தொடர்ந்து  வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதையடுத்து, அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் அவரது வயிற்றிற்க்குள் சென்ற பாம்பை வெளியே கொண்டு வர முயற்சி மேற்கொண்டனர்.  இந்த நிலையில் சுமார் 4 மணி நேரத்தில்  சிகிச்சை பலனின்றி மஹிபால் உயிரிழந்தார்.

உயிரிழந்த மஹிபால் சிங்குக்கு. மனைவி, ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர்.

இது சம்பவம் குறித்து  ராஜ்புரா கோட்வாலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மஹிபால்சிங் பாம்பை வைத்து விளையாடும் வீடியோ…