ஏர் இந்தியா விமானத்தில் மேலும் மது கேட்டு அலப்பறை செய்த பெண்! (வைரல் வீடியோ)

மும்பை:

ண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில், மேலும் மது கேட்டு அநாகரிகமாக செயல்பட்ட பெண், லன்டனில் கைது செய்யப்பட்டார். அவர் போதையில் விமானத்தினுள் செய்த அலப்பறை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பையில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நேற்று ஒரு பெண் பயண மானார். அவருக்கு விமான பயண விதிப்படி, அவர் கேட்ட மது கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக போதை தலைக்கேறிய அந்த பெண், அருகிலுள்ள பயணிகளிடமும், விமான ஊழியர்களிடமும் மேலும் மது கேட்டு தரக்குறைவாக நடந்துகொண்டார்.

விமான ஊழியர்களிடம், நான் ஒரு சர்வதேச வக்கீல், பணக்கார இந்தியா எங்களிடம் பணம் பறிக்கிறது, நீங்கள் முட்டாள்கள் என்று சரமாரியாக குற்றச்சாட்டுக்களை சுமத்தி தகராறில் ஈடுபட்டார். தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்தலும்,   விமான பைலட் மீது எச்சில் துப்பியும் அநாகரிகமாக நடந்து கொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. மற்ற விமான பயணிகள் போதை பெண் நடவடிக்கைகளால் எரிச்சல் அடைந்தனர்.

இந்த நிலையில், இந்த ஏர்இந்தியா  விமானம் லண்டன் சென்றடைந்ததும் அந்த பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.

விமானத்தினுள் அந்த பெண் தகராறு செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://www.youtube.com/watch?v=20jXACg7OJU

Thanks: Outlook