சென்னை : மது போதையில் மனைவியை அம்மியால் அடித்துக் கொன்ற கணவர்

சென்னை

து போதையில் மனைவியை தலையில் அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியில் சிவகாமி அம்மை தெருவில் வசிப்பவர் அப்துல் ஜாபர். சுமார் 50 வயதான இவர் தனது 44 வயதான மனைவியான முபாரக் என்பவருடன் வசித்து வந்தார்.   அப்துல் ஜாபருக்கு மது அருந்தும் பழக்கம் அதிகம் உள்ளதால் அவர் வேலைக்குச் செல்லாமல் மனைவியுடன் தினந்தோறும் தகராறு செய்து வந்தார்.

குடும்பச் செலவுக்கு பணம் தராத கணவரிடம் முபாரக் பணம் கேட்கும் போது அவரை ஜாபர் தாக்குவது வழக்கமாகி உள்ளது.  நேற்றிரவு வழக்கம் போல மது போதையுடன் வந்த ஜாபர் மனைவியுடன் சண்டை இட்டுள்ளார்.   முபாரக் தூங்கி விட்டார்.   அனால் ஜாபர் தூங்காமல் உலவிக்கொண்டு இருந்துள்ளார். திடீரென  வீட்டில் இருந்த அம்மிக்க்கல்லை எடுத்து மனைவியை தாக்கி உள்ளார்.

இதனால் தலையிலும் மார்பிலும் காயம் அடைந்த முபாரக் அதே இடத்தில் மரணம் அடைந்துள்ளார்.    அக்கம் பக்கம் வசிப்பவர்கள் அங்கு சத்தம் கேட்டு வருவதற்குள் ஜாபர் அங்கிருந்து ஓடி விட்டார்.   தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் முபாரக்கின் சடலத்தை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.   பதுங்கி இருந்த ஜாபரை பிடித்து காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.