முதல்வருக்கு குடிபோதையில் கொலை மிரட்டல் விடுத்த போலிஸ்

 

டில்லி

குடிபோதையில் டில்லி போலிஸ் கான்ஸ்டேபிள் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஃபோன் செய்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்லப் போவதாக மிரட்டியுள்ளார்..  இந்த சம்பவம் டில்லியில் பெரும் பரபரப்பை உண்டாகி உள்ளது

விகாஸ்குமார் என்பவர் டில்லி காவல் துறையின் ஏழாம் படைப் பிரிவில் கான்ஸ்டேபிள் ஆக பணி புரிந்து வருகிறார்.  இவர் ரோகிணி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஃபோன் செய்து இருக்கிறார்.  அப்போது தனது, பெயர் மற்றும் வேலை விவரங்களைக் கூறி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தாம் கொல்லப் போவதாக கூறி இருக்கிறார்..

இது குறித்து உளவுத்துறையினர் அவரை விசாரித்துள்ளனர்.  முதலில் அடையாளம் தெரியாத ஒருவர் தன்னுடைய ஃபோனை இரவல் வாங்கி பேசியதாகவும் அவர் ஃபோன் செய்திருக்கலாம் எனவும் தெரிவித்து உள்ளார்.   மேலும் விசாரிக்கையில் தான் மிக அதிகமாக குடித்திருந்ததாகவும், குடி போதையில் இப்படி ஃபோன் செய்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்..

இதன் காரணமாக டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.