குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்து: இயக்குனர் வாசுவின் மகன் ‘பிக்பாஸ் டிரிக்கர்’ சக்தி பகிரங்க மன்னிப்பு

சென்னை:

நேற்று முன்தினம் குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இயக்குனர் வாசுவின் மகன் ‘பிக்பாஸ் சக்தி’ தனது செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கோரி உள்ளார்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள சக்தி, நேற்றைய செயலுக்காக மிகவும் வருந்துகிறேன்.  இதுபோன்ற செயல் மீண்டும் நடக்காது என்பதை உறுதியாக கூறுகிறேன் என்று பகிரங்க மன்னிப்பு கோரி உள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம பிரபலமானவர் இயக்குனர் வாசுவின் மகன் சக்தி. இவர்,  ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ஏதோ செய்தாய் என்னை’ , ‘மகேஷ் சரண்யா மற்றும் பலர்’  உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.

சம்பவத்தன்று குடிபோதையில் தன்னுடைய சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி சென்று சூளைமேடு பகுதியில் உள்ள  இளங்கோவடிகள் தெருவைச் சேர்ந்த ஒருவரது கார் மீது மோதி விட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது அந்த பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு அண்ணா நகர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர்மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை யினர், அவரை எச்சரித்து ஜாமினில் விடுவித்தனர்.

இந்த நிலையில்,  தான் செய்த தவறுக்காக, முகநூல் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில்,

“நேற்றைய செயலுக்காக மிகவும் வருந்துகிறேன்.  இதுபோன்ற செயல் மீண்டும் நடக்காது என்பதை உறுதியாக கூறுகிறேன்.  இந்த சம்பவம் தனக்கு ஒரு பாடம் என்றும் இனி குடித்துவிட்டு யாரும் வண்டி ஓட்ட வேண்டாம்”. என்று கூறி உள்ளார்.