வால் டி அவோஸ்டா, இத்தாலி

த்தாலி நாட்டின் சுற்றுலாத் தலம் ஒன்றில் விடுதி திரும்ப வேண்டிய பயணி ஒருவர் குடிபோதையில் மலையில் ஏறிச் சென்றுள்ளார்.

இத்தாலி நாட்டில் ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ள எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலங்களில் வால் டி அவோஸ்டாவும் ஒன்று.   இங்கு உலகத்தின் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.   சிறு சிறு குன்றுகளில் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ள இந்த நகரில் அது போன்ற விடுதிகளில் தங்கி இயற்கையை பயணிகள் ரசிபார்கள்.

அந்த நகருக்கு சுற்றுலா வந்த பயணிகளில் ஒருவர் எஸ்டோனியாவை சேர்ந்த பாவெல்.   இவர் ஒரு குழுவாக இங்கு வந்துள்ளார்.    குழுவில் இருந்து அனைவரும் தனித் தனியாக ஊரை சுற்றிப் பார்க்கவும் எழிலை ரசிக்கவும் கிளம்பி உள்ளனர்.   பாவெலுக்கு அந்த ஊரின் அழகை விட அந்த ஊரில் உள்ள மதுவின் சுவை மிகவும் கவர்ந்துள்ளது.   அளவுக்கு மீறி மது அருந்தி உள்ளார்.

விடுதிக்கு திரும்புவதாக எண்ணிக் கொண்டு அருகில் இருந்த மலை மீது பாவெல் சென்றுள்ளார்.   சுமார் சுற்றிலும் பனி படர்ந்த மலையில் அவர் விடியற்காலை 2 மணியிலிருந்து 3 மணி சமயத்தில் விடுதியை தேடி உள்ளார்.  ஆனால் வழி தவறியதால் அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை.   அங்கிருந்த ஒரு மது அருந்தும் விடுதி (பார்) உள்ளே சென்று அமர்ந்துள்ளார்.

அவரைக் காணாமல் தேடி வந்த குழு அமைப்பாளர்கள் பாவெல்லைக் கண்டு பிடித்து  மீண்டும் விடுதிக்கு அழைத்து வந்துள்ளனர்.    அவர் அந்த நேரத்திலும் மேலும் மது அருந்தியபடி அமரிந்திருந்தது குறிப்பிடத் தக்கது.