கொல்கத்தா

குடிபோதையில் வேகமாக வாகனம் செலுத்து வந்த பெண்ணை தடுத்த போலீசை நடு ரோடில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் ஒரு பெண்.

கொல்கத்தாவின் சின்னிகிரகாதா பைபாஸ் சாலையில் ஒரு பெண் மது அருந்திவிட்டு பயங்கர வேகத்தில் ஒரு காரை ஓட்டி வந்தார்.  அந்த காரில் அவரோடு இன்னொரு பெண்ணும், ஒரு ஆணும் இருந்தனர்.  மூவரும் மிகவும் போதையில் இருந்தனர்.  வேகமாக வந்த கார் பாதை இடையில் இருந்த ரோடு டிவைடரில் மோதி நின்றது.

அதைக் கண்ட டாக்சி டிரைவர் ஒருவர் அந்த பெண்ணை காரிலிருந்து இறக்க முயற்சி செய்துள்ளார். வெளியே வந்த அந்தப் பெண் டிரைவரை அடிக்கத் தொடங்கியுள்ளார்.  அதை பார்த்த போலீஸ் கான்ஸ்டேபிள் ஒருவர் அவரை தடுத்து இருக்கிறார்,  உடனே அந்தப் பெண் அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மாறி மாறி முத்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

அருகிலிருந்த வேறொரு பெண்ணின் உதவியுடன் போலீஸ்காரர் அந்த மூவரையும் மிகுந்த சிரமத்துடன் காவல் நிலையத்துக் கொண்டு வந்துள்ளார்.  விசாரணையில் அவர்கள் மூவரும் காலேஜ் ரோட்டில் வசிப்ப்பவர்கள் என்றும் அந்த பகுதியின் துர்கா பூஜை கமிட்டியின் முக்கிய புள்ளிகள் என்பதும் தெரிய வந்துள்ளது