சென்னை: பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

2020-21 ம் கல்வியாண்டில் 220 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் கொரோனா  காரணமாக 5 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆகையால் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க மதிய உணவுக்கு பதில் உலர் உணவு பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி மே மாதத்திற்கான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

ஜூன் முதல் இயல்பு நிலை திரும்பும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு நாள்தோறும் 100 கிராம் அரிசி, 40 கிராம் பருப்பு, உயர் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு 150 கிராம் அரிசி, 56 கிராம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது.