கார் விபத்தில் டி எஸ் பி பரிதாப மரணம்

 

திருவண்ணாமலை

ரசுப் பேருந்து காரில் மோதியதில் காவல்துறை அதிகாரி மரணம் அடைந்தார்.

திருவண்ணாமலை அருகே தென் அரசம்பட்டு பகுதியில்  காவல்துறை அதிகாரி (டி எஸ் பி) சண்முக சுந்தரம் காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தார்.  அப்போது எதிரில் வந்த அரசுப் பேருந்து நிலை தடுமாறி காரில் மோதி உள்ளது.

இதில் சண்முக சுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணம் அடைந்தார்.   அவருடன் காரில் பயணம் செய்துக் கொண்டிருந்த சுந்தரம் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.   அவர்  திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.