போலி சான்றிதழ் விவகாரம்: ஏவிவிபி மாணவர் தலைவர் அங்கிவ் சேர்க்கை ரத்து!

டில்லி:

போலி சான்றிதழ் மூலம் டில்லி பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு சேர்ந்த ஏவிபிவி மாணவர் சங்க தலைவர்  அங்கிவ் பசாயாவின் சேர்க்கையை டில்லி பல்கலைக்கழகம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.

டில்லி பல்கலைக்கழக தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏபிவிபி மாணவர் சங்க தலைவர் அன்கிவ் பசோயா, போலி சான்றிதழ் கொடுத்து  டில்லி பல்கலைக்கழகத்தில் உயர் படிப்பு படித்து வருகிறார்.

இவர் டில்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. புத்திஸ்ட் பாடப்பிரிவு எடுத்து படித்து வருகிறார். அவர் மேற்படிப்புக்காக தாக்கல் செய்த சான்றிதழ்கள், தமிழகத்தில் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்திருப்பதாக இருந்தது.

இந்த நிலையில், அவர் சான்றிதழ் போலியானது என புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, சான்றிதழின் உண்மைத்தன்மை குறித்து அறிய டில்லி பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டது. அதிலும், அங்கிவ் பசாயாவின் சான்றிதழ் போலி என்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், அங்கிவ் பசாயா தனது தலைவர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று ஏவிபிவி அமைப்பும் வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில், அன்கிவ் பசோயாவின் மேற்படிப்பை ரத்து செய்து  டில்லி பல்கலைக்கழகம் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.

போலி சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்தது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.