டில்லி பல்கலைக்கழகத்தில் 62ஆயிரம் இடங்களுக்கு 2.5 லட்சம் பேர் விண்ணப்பம்!

டில்லி:

டில்லி பல்கலைக்கழகத்தில் 62ஆயிரம் இடங்களுக்கு 2.5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட சுமார் 20ஆயிரம் விண்ணப்பங்கள் குறைவு என்று கூறப்பட்டுள்ளமு

பிரபலமான டில்லி பல்கலைக்கழகம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவதால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த ஆண்டை விட 20 ஆயிரம்  குறைந்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதுபோல பிரபல மான டில்லி பல்கலைக்கழகத்திலும் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, மே 30ந்தேதி முதல் ஜூன் 22ந்தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இந்த நிலையில் நடப்பு ஆண்டு 2,58,388  விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளது. கடந்த ஆண்டு  2,78,544 பேர் விண்ணப்பதிருந்த நிலையில் நடப்பு ஆண்டு சுமார் 20 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைந்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை குறைய காரணம் என்ன என்பது குறித்து கூறிய பல்கலைக்கழக அதிகாரி, பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்து வரும் விரும்பத்தகாத நிகழ்வுகள் மற்றும், தேசிய தர வரசை பட்டியலில் டில்லி யுனிவர்சிட்டியின் மதிப்பு குறைந்துள்ளதாலும், சேர்க்கையில் ஏற்பட்டுள்ள தாமதம் போன்றவற்றால் மாணவர்கள் சேர்க்கை குறைந்திருப்பதாக கூறி உள்ளார்.