ஏக காலத்தில் இரண்டு பட்டப் படிப்புகள்!

--
நெட்டிசன்:
N.SM. Shahul Hameed, BCom(Hons) பதிவு
ல்வியே பெரிதென்று ஏங்கிடினும் அது கிட்டாதவர்களுக்கும்விருப்பமின்றி கல்லூரிக்குள் திணிக்கப்பட்டும் தம் மனம் விரும்பிய பாடத்தில் பட்டம் பெற விரும்பும் பல்கலைப் பிரியர்களுக்கும் மீண்டும் வசந்தமளிக்கும் வாய்ப்புகள் வந்துவிட்டன.

ஏகலைவர்‘ ஏற்றிவைத்த தொலை நிலைக் கல்வித் தீபம் இனி மேலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.   ஆம்!, ஏழைகளின் பொருளாதார வளத்தை மேம்படுத்திக்கொள்ள,

அரசுப் பணிகளில் அமர,  தொழில் நுட்பப் பிரிவுகளில் படித்தாலும் தன்னுள் தாகமெடுக்கும் மொழி இலக்கியம் சமூகவியல் சார்ந்த படிப்புகளிலும் ஏக காலத்தில் கவனம் செலுத்த,

 பெரிதும் வழிசெய்யும் பல்துறை சார்ந்த பலகலைத் தேர்ச்சிகளை குறுகிய காலத்தில் பெறும் வகையில்,   ஒன்றுக்கு மேற்பட்ட பட்ட/பட்டயப் படிப்புகள்  படிக்கும் வசதி மீண்டும் வந்துவிட்டது!.

தொலை நிலைக் கல்விமுறை ஏற்கனவே தொடர்ந்து இருப்பதுதான். இருந்தாலும், 2012-ல்தான் அரசு அதற்கு கல்லூரியில் சேர்ந்து படிக்கும் நிலைக்கு இணையான மதிப்பளித்தது. (Government recognized the degrees studied through DDE at par with regular degrees).

இந்த வசதியைப் பயன்படுத்திக்கொண்டு படிப்பில் அதிக நாட்டமும்,வேலை வாய்புகளுக்கான திறனை அதிகரித்துக்கொள்ளும் நோக்கமும் உடைய பல மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்களுக்கு படித்தனர்.  இந்த வசதி பிறகு 2016-ல் நிராகரிக்கப்பட்டது.  இப்போது மீண்டும் பல்கலைக் கழக மானியக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

உதாரணமாக, BCom, BBA, BCA, MBA, BSc, MSc போன்ற படிப்புகளைப் படித்துக்கொண்டே வேறு ஒரு பல்கலைக் கழகத்தின் இன்னொரு பட்டப்படிப்பிலும் ஏக காலத்தில் தொடர்வதற்கு இனி அனுமதியுள்ளது

இந்நிலையில்நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில்பட்டப்படிப்புடன் சேர்த்து திறன் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஏற்கனவே இருந்த ஒரே நேரத்தில் இரு பட்டப் படிப்புகள் படிக்கும் நடைமுறைக்கு யுஜிசி (UGC) ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், 3 ஆண்டுகளில் ஒரு மாணவருக்கு இரு டிகிரி சான்றிதழ்கள் கிடைக்கும்.

அதாவதுஒரே நேரத்தில் ஒரு பல்கலையில் முழு நேரமாகவும்அதே பல்கலை அல்லது வேறொரு பல்கலை.யில் தொலைதூர கல்விஆன்லைன் மூலமாகவோ மற்றொரு டிகிரிகளை மாணவர்கள் படித்தால்ஏதேனும் ஒன்றே செல்லுபடியாகும் என்று 2016-ல் இருந்த நிலை இனி இல்லைஇனி ஏக காலத்தில் இரண்டு படிப்புகள் படித்தாலும் இரண்டுமே செல்லும்.

தஞ்சை மாவட்டம்பட்டுக்கோட்டையில் 2012-ல் ஆரம்பிக்கப்பட்ட எமது OLI Academy-யின் (ஓளி அழகியகடன் அறக்கட்டளையால் ஏற்படுத்தப்பட்ட பயிலகம் மற்றும் நூலகத்தின்  வழிகாட்டுதலில்), பல மாணவர்கள் இவ்வகையிலான இருவித பட்டப் படிப்புகளுக்கு தொலை நிலைக் கல்வி வழங்கும் பல்கலைக் கழகங்களின் இயக்ககங்களின் மூலம் (முன்பு) படித்து இரண்டிலுமே நல்ல தேர்ச்சிபெற்றுள்ளனர்.  பல பொறியியல் கல்லூரி மாணவர்கள்  BCom/BBA/BA(English/Tamil) ஆகிய பாடங்களில் படித்துள்ளனர்.  இது பல மாணவர்களின் வேலை வாய்ப்புக்கு/பணி உயர்வுக்கு உதவியுள்ளது.

மதராசாக்களில் பயின்று வரும் மாணவர்களில் பலரும் BCom/MCom/BBA படிப்புகளோடு BA Islamic Studies or BA English/தமிழ்/Arabic ஆகிய படிப்புகளை ஏக காலத்தில் படிப்பதும் உண்டு.   பொராவாச்சேரியைச் சேர்ந்த ஒரு மதராசாவின் முதல்வர் அவரின் மாணவர்கள் அனைவரையுமே இவ்வகை உலகக் கல்வி பெறுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.  (மறுமைக்கான கல்வியை தன் மதரசாவிலும், உலகக்  கல்வியை தொலை நிலைக் கல்வி இயக்க கத்தின் பயிலகங்களின் வாயிலாகவும் பெற்று மாணவர்கள் வளர்கின்றனர்

இனிமேல், மாணவர்கள் தொழில் அல்லது அறிவியல் சார்ந்த ஒரு இளங்கலை அல்லது முதுகலைப் படிப்புடன் கூடுதலாக  இன்னொரு பாடத்தில் அல்லது மொழியியல் போன்ற இலக்கியப் பாடங்களில் ஆர்வம் காட்டலாம்.  அவ்வகையில் இதுவரை இந்த வருடம் படிக்க ஆர்வம் காட்டும் மாணவர்கள் பலர் 

1)     CA/CMA/CS போன்ற படிப்புகளில் ஒன்றைப் படித்துக்கொண்டே BCom/BBA/BA English/BA Islamic Studies ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்ய விரும்புகின்றனர். (து போன்ற வாய்ப்பு ஏற்கனவே உள்ளதுதான்.)

2)     BCom/BBA/BCA/BSc போன்ற படிப்புகளில் ஒன்றைப் படித்துக்கொண்டே BA(English)/BA(Islamic Studies)/BA(Tamil)/BA(Socialogy) ஆகியவற்றில்  ஒன்றை தேர்வு செய்ய விரும்புகின்றனர்.

3)     பலரும் ஒரே ஒரு பட்டப் படிப்பு படித்துக்கொண்டே அரசு வேலை வாய்ப்பு பெறும்  நோக்கிலான பலவித போட்டித் தேர்வுகளுக்கும் வங்கித் தேர்வுகளுக்கும் கவனம் செலுத்தவும் விரும்புகின்றனர்.

இவை எல்லாவற்றுக்குமே நூலக வசதியும்தேவையான பயிற்சியளிக்கும் திட்டமும் எங்களிடம் உள்ளது.  இதுபோல ஒவ்வொரு கல்வி மாவட்ட/வட்டாரத்தில் அரசு அல்லது தனியார்கள் முயன்று வசதி வாய்ப்புகளை ஏழை மாணவர்களும் பெறும் விதத்தில் அமைத்துக்கொடுப்பதும் ஒரு  அழகிய கடனே!.   ஆர்வலர்கள் விரும்பினால், தேவையான ஆலோசனை உதவிகள் வழங்க நாமும் ஆர்வமாய் உள்ளோம்.  ஒரு கிராமத்தின் ஒரு திண்ணைகூட கல்விச் சோலயாக மாறும்!, மாற்றம் நாடினால்!.

எல்லாவற்றினும் மேலாககிராமப்புற மாணவர்களுக்கு இவ்வித வசதி வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வூட்ட வேண்டிய தேவை அதிகம் உள்ளது.

காலம் நம்மைத் தனிமைப் படுத்தினாலும், கொரானா போன்ற தொற்று நோய்கள் தனிமைப் படுத்தினாலும், கல்வி நம்மை என்றும் எப்போதும் உலகோடு ஒன்றிணைக்கும்.

கல்வி பெரிதென்று கருத்திட் கொள்வோர்க்கு

உள்ளவர் உதவிடுவோம்! – நல்ல

காலம் தருகின்ற கருணை தேசத்தை

உள்ளத்தில் விதைத்திடுவோம்!

ஒளி புகுந்த இதயம் விரியும்’ என்பது நபிமொழி.

விழிப்புணர்வுடன் விரிவடையும் இதயம் உலகை உயர்த்தும்!

N.S,M. Shahul Hameed, OLI Academy, Madukkur – 614903

Article Ref: nsmsh-20200522-OLI-DDE-2degrees