Random image

இரட்டை இருப்பிடச் சான்றிதழ்: தர வரிசைபட்டியலில் இடம்பெறாத 90 மாணவர்கள் மருத்துவ கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அனுமதி

சென்னை:

மிழக மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கான கலந்தாய்வு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு இரட்டை இருப்பிட சான்றிதழ் காரணமாக வேறு மாநிலத்தில் வசித்து வரும் மாணவர்கள், தமிழக மாணவர்களின் உரிமையை தட்டி பறித்த நிலையில், மதுரை உயர்நீதி மன்றம் மருத்துவ கலந்தாய்வின்போது  ஆதார் அட்டையை சரிபார்க்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு மருத்துவ கலந்தாய்வுக்கு  இரட்டை இருப்பிட  சான்றிதழ் காரண மாக அவர்களின் பெயர் தர வரிசை பட்டியலில் இடம்பெறாத நிலையில், அவர்களை மருத்துவ கலந்தாய்வில் சேர்த்துக்கொள்ள சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இவ்வாறு 90 பேர்  தர வரிசை பட்டியலில் இடம்பெறாமலே கலந்தாய்வில் பங்குபெற்றுள்ளனர்.

இதன் காரணமாக தமிழகத்தில் வசித்து வரும் தமிழக மாணவர்கள் 90 பேரின் மருத்துவ கனவு  உயர்நீதி மன்ற உத்தரவால் தகர்க்கப்பட்டுள்ளது.  இது தமிழகத்தில் சலசலப்பை உருவாக்கி உள்ளது.

மிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நேற்று முதல் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மருத்துவ கலந்தாய்வில்,  தமிழக பாடத்திட்டத் தில் படித்தவர்களில் 70 சதவிகிதம் பேருக்கும் சி.பி.எஸ்.இ மற்றும் இதரப் பாடத்திட்டத்தில் படித்த வர்களில் 30 சதவிகிதம் பேருக்கும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும்” என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது இரட்டை இருப்பிட சான்றிதழுக்கு உயர்நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு இதுபோன்ற இரட்டை சான்றிதழ் காரணமாக மாணவர்கள் சேர்க்கப் பட்ட விவகாரத்தில் சர்ச்சை எழுந்த நிலையில், அது தொடர்பான வழக்கில், மதுரை உயர்நீதி மன்ற கிளை ஆதார் அட்டையை சரிபார்த்தே இடம் ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது சென்னை உயர்நீதி மன்றம் 90 பேருக்கு அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற ஆணையின் மூலம் 90 பேர் சேர்க்கப்பட்டதில், 29 பேர் தரவரிசையில்  முதன்மையான இடங்களில் உள்ளனர். மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பத்திலேயே தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்கள் ராணுவம், வங்கி மற்றும் ஆராய்ச்சிப் பணியில் வெளிமாநிலங்களில் பணியாற்றி வந்தால் அவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தோம். ஆனால், அதைத் தவிர, இதர பிரிவில் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தை அணுகி வாய்ப்பைப் பெற்றுள்ளனர்” என்றார்.

இது தமிழகத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நேற்று நடைபெற்ற முதல்நாள் பொதுப்பிரிவுக்கான கவுன்சிலிங்கில் 572 இடங்கள் நிரம்பி உள்ளன. இதில் பெரும்பாலான மாணவர்கள் சென்னை மருத்துவக்கல்லூரிகளையே தேர்ந் தெடுத்து உள்ளனர்.