2000 நோட்டு கத்தைகளுடன் போஸ் கொடுத்த என்.ஆர்.ஐ! கிடைத்தது எப்படி?

மத்திய அரசு திடீரென்று 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததும், அந்த நோட்டுகளை மாற்ற மக்கள் பிரசவ வேதனை பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் துபாயை சேர்ந்த என்.ஆர்.ஐ ஒருவர் ரூபாய் 1.6 லட்சம் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்து ஸ்டைலாக போஸ் கொடுத்து எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். அதே நேரத்தில் இவ்வளவு 2000 ரூபாய் நோட்டுக்கள் வெளிநாட்டில் இருக்கும் இவர் கையில் கிடைத்தது எப்படி என்ற புதிய சர்ச்சையும் கிளம்பியிருக்கிறது.

latheef

துபாயில் வசிக்கும் லத்தீப் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர். இவருக்கு பல நாடுகளின் கரன்சியை சேகரிக்கும் பழக்கம் இருப்பதாக அவர் தெரிவித்தார். தான் ஒரு வேலை விஷயமாக கேரளா போனபோதுதான் இந்த 2000 நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வாய்ப்பை நழுவவிட வேண்டாமே என்று தனக்கு தெரிந்த நன்பர்களிடம் போய் நான் 2000 ரூபாய் நோட்டுக்களை சேகரித்தேன். ஒவ்வொருவரும் ரூபாய் 25000 மதிப்பு வரையிலான 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து உதவினார்கள் என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.

இவர் பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதல்வர் பிரணாயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, பாடகர் கே.ஜெ.யேசுதாஸ், நடிகர் மம்முட்டி போன்றோரின் பிறந்த நாட்கள் வரும் சீரியல் நம்பர் ரூபாய் நோட்டுக்களை சேகரித்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சசிதரூரின் பிறந்தநாளை சீரியல் நம்பராக கொண்ட ஒரு ரூபாய் நோட்டை அவருக்கு பரிசளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Courtesy: www.business-standard.com
Photo Source: Facebook